மயானச் சூறை உற்சவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

73பார்த்தது
மயானச் சூறை உற்சவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பழைய பஜார் வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயானச் சூறை பிரம்மோற்சவம் 08 ம் தேதி  தொடங்கி  வரும் 20 ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.   பிரம்மோற்சவ விழா யொட்டி தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை பூஜைகள் நடைபெறுகின்றது. முக்கிய நிகழ்ச்சியான்  மயானச் சூறை உற்சவம் அமாவசை தினத்தை யொட்டி உற்சவர்  அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் எழுந்தருளினர்.   பக்தர்கள்  உடல் முழுவதும் அலகு குத்தி  டிராக்டரில் அம்மனை  நகரின் முக்கிய வீதிகள் வழியாக  நந்தி ஆற்றின் அருகே  சுடுகாட்டில் எழுந்தளினார். மயானச் சூறை நிகழ்வில் பங்கேற்று அம்மனை வழிப்ட ஆயிரக்கணக்கான  பொதுமக்கள் சுடுகாட்டில் குவிந்தனர். அங்கு அசுரனை  அங்காள பரமேஸ்வரி தேதி வதம் செய்யும்  நிகழ்வு முடிந்ததும் அம்மன் மீது பெண்கள்  எலுமிச்சை பழம்,   பழங்கள், சுண்டல், கொழுக்கட்டை ஆகிய பொருட்களும், விவசாயிகள் தானிய வகைகள் வீசி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான இளைஞர்கள்  வித விதமாக வேடங்கள் அணிந்துக்கொண்டும், உடலில் அலகு குத்திக்கொண்டு டிராக்டர், ஆட்டோ போன்ற வாகனங்கள்  எழுத்துச் சென்று  நேர்த்திக்கடன் செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி