திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர். கே. பேட்டை வட்டம் அம்மையார்குப்பம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் நெசவு தொழிலாளி இந்த பகுதி நகர காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் வீட்டில் இரவு அனைவரும் உறங்கி விட்ட பின்பு வீட்டில் உள்ள நெசவுத்தூள் எந்திரங்கள் மூலம் இரவு முழுவதும் நெசவு வேலை பார்த்து வந்துள்ளார் இவர் காலையில் இல்லை என்று இவரது மனைவி சிவகாமி தேடி உள்ளார் வீட்டின் பின்புறம் பார்த்த போது ராஜேந்திரன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெளியேறி படுகொலை செய்யப்பட்டுள்ளார் உறவினர்கள் ஆர். கே. பேட்டை போலீசுக்கு தகவல் அளித்தனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் பிரேதத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் குறித்து ஆர்கே பேட்டை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.