கத்தியை காட்டி மிரட்டி செல்போன், நகை பறிப்பு: 2 பேர் கைது

56பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இளைஞரை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் நகையை பறித்த இரண்டு கொள்ளையர்கள் கைது

ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக திருத்தணி அருகில் உள்ள நெமிலி கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் வயது 20 என்பவர் சென்றிருந்தார் அப்பொழுது அருகே உள்ள மலைப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது மர்ம நபர்கள் இரண்டு பேர் அவரை பின்தொடர்ந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர் பின்னர் வீட்டிற்கு சென்று தன் தாயார்ரிடம் கொள்ளை சம்பவம் குறிப்பு தெரிவித்த போது தனது தாயாரின் ஆலோசனைப்படி லோகேஷ் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காண்பிக்கும்படி அறிவுறுத்தியதின் பேரில் லோகேஷ் கொள்ளையர்களை அடையாளம் காண்பித்தார் பின்னர் திருத்தணி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மகிதரன் ஆகிய இரண்டு கொள்ளையர்கள் பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி