திருவள்ளுவர் மாவட்டம் கூனிப்பாளையத்தில் இயங்கி வரும் மணல் குவாரியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் புகுந்து அங்குள்ள
தொழிலாளர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனை தடுத்த ஊர்மக்களையும் அவர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.