நிழற்குடை இல்லாத திருத்தணி பைபாஸ் சாலை: பயணியர் அவதி.

965பார்த்தது
நிழற்குடை இல்லாத திருத்தணி பைபாஸ் சாலை: பயணியர் அவதி.
திருத்தணி பைபாஸ் ரவுண்டான பகுதியில் இருந்து தினமும் அதிகாலை, 4: 00 மணி முதல் நள்ளிரவு, 11: 00 மணி வரை பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சென்னை, திருவள்ளூர், திருப்பதி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனர். இதுதவிர நாகலாபுரம், சிவாடா, அருங்குளம், நல்லாட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நகர பேருந்துகள் மூலம் மக்கள் சென்று வருகின்றனர். இதனால் எப்போதும் பைபாஸ் ரவுண்டான பேருந்து நிறுத்தத்தில், 50க்கும் மேற்பட்டோர் பேருந்துக்காக மழை மற்றும் வெயிலில் காத்திருக்கின்றனர். ஆனால் அங்கு நகராட்சி நிர்வாகம் நிழற்குடை அமைக்காததால் பயணியர் பேருந்துகள் வரும் வரையில் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் காத்திருந்து மேற்கண்ட இடங்களுக்கு பயணியர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் பைபாஸ் ரவுண்டானாவில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என திருத்தணி நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி