ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்தது

66பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேற்கூறையின் பூச்சி இடிந்து விழுந்து முன்னதாக மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றதால் விபத்திலிருந்து தப்பித்த மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகப்பா நகர் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 110 மாணவர்களுக்கும் மேல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று மாணவர்கள் பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற பிறகு பள்ளியின் மேற்கூரை பூச்சி பெயர்ந்து விழுந்துள்ளது நிலையில் பள்ளியில் மாணவ மாணவிகள் யாரும் இல்லாததால் பெருமளவு விபத்து தவிர்க்கப்பட்டது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் இது போன்று அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி