கிக்பாக்ஸ்ங் போடடியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்

53பார்த்தது
வாகோ இந்தியா கிக் பாக்ஸ்ங் பெடரேஷன் சார்பில் மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் (15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட) ஜூனியர் அளவில் கிக் பாக்ஸ்ங் போட்டிகள் நடைபெற்றது. மாநில அளவில் பதக்கம் வென்ற மாணவ, மாணவியரை இப் போட்டிகளுக்கு கிக் பாக்ஸ்ங் பெடரேஷன் சார்பில் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து 45 பேர் பங்கேற்ற நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அம்மையார்குப்பத்தில் ஜாக் கிக் பாக்ஸ்ங் மையம் சார்பில் பயிற்சியாளர் மோகன்ராஜ் தலைமையில் அம்மையார்குப்பம் அரசுப்பள்ளி 11ம் வகுப்பு மாணவர் பிரவீன்(16), திருத்தணி தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவன் ஜெய் சீனிவாசன்(17), பாலாபுரம் சேர்ந்த ஊட்டி ரானுவ கல்லூரியில் பி. ஏ. (பாதுகாப்பு ) படித்து வரும் ஜனனி(18) ஆகியோர் படித்து வருகிறார். அவர்கள் மூன்று பேரும் கிக் லைட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். தங்கப்பதக்கம் வென்று பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு திருத்தணி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது, இதனை தொடர்ந்து அம்மையார்குப்பம் பேருந்து நிலையத்தில், மேள தாளங்கள் முழங்க கிராமமக்கள் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கி கிராம வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது பெண்கள் மலர்மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி