திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி சாலையில் உள்ள கிளை சிறையில் டெல்லி உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி ஏற்படுத்தப்பட்ட குழு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறைகளை ஆய்வு மேற்கொள்ளும். இந்த குழு இன்று திருத்தணி கிளை சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜூலியர் புஷ்பா தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், மாவட்ட நீதிபதிகள் கிளை சிறை கண்காணிப்பாளர் அடங்கிய குழு சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் உணவு, குடி தண்ணீர், சட்டம் சம்பந்தமான உதவிகள் ஆகியவை சிறை கைதிகளுக்கு வழங்கப்படுகிறதா கிளை சிறையில் கட்டிடத்தன்மை மேலும் பல்வேறு ஆய்வுகள் இந்த குழு ஆய்வு மேற்கொண்டனர். இதனையேடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியர் புஷ்பா இந்த தகவலை தெரிவித்தார்.