திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த டி. சி. கண்டிகை ஊராட்சியில் லக்ஷ்மி தரப்பிரசாத் என்பவர் இந்த கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடம் 9 ஏக்கர் பட்டாவுடன் உள்ள இடத்தை அளந்து தர வேண்டும் நில அளவீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். சென்னை உயர் நீதிமன்றம் திருத்தணி நீதிமன்றத்தை மூலமாக உத்தரவு பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி இருந்தனர். இதன் அடிப்படையில் திருத்தணி நீதிமன்றத்தில் அந்த இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் திருத்தணி வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள், நில அளவையர் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர் புவனேஷ், மற்றும் பாதுகாப்பு பணிக்கு திருத்தணி சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர்கள் கொண்ட 10 அதிகாரிகள் மேற்கொண்டனர். டி. சி. கண்டிகையில் நில அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர் அப்போது அங்கு வந்த டி. சி. கண்டிகை அருந்ததியர் காலனி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இந்த இடம் அளவீடு செய்யக்கூடாது, 5 மாதத்திற்கு முன்பு இந்த இடம் அரசின் இடம் என்று கூறி எங்களுக்கு பட்டா தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
எங்களுக்கு நிரந்தரமாக அரசு சார்ந்த இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.