சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

74பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஆர். கே. பேட்டை அடுத்த அமுதா ரெட்டி கண்டிகை, ராமாபுரம், சுந்தரராஜபுரம், ஸ்ரீ காளிகாபுரம், சோம சமுத்திரம் ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

விவசாயத்தையே நம்பி உள்ள இந்த கிராம மக்கள் அவசர தேவைக்காக சோளிங்கர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

ஆனால் அமுதா ரெட்டி கண்டிகை கிராமத்தில் செல்லும் சாலையில் விவசாய நிலத்திற்கு அருகே குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ மாணவிகள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

ஆனால் ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி சாலையை சீர்படுத்தி போக்குவரத்தை எளிமைப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி