பிறப்பு சான்றிதழ் கேட்டு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம்

84பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் வி. சி. ஆர் கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் குணசேகர் விவசாயக் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. 3 வது குழந்தை இவரது மனைவி மகாலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ளார். 2021ஆம் ஆண்டு இவரது மனைவி மகாலட்சுமி பிரசவ வழியால் துடித்துள்ளார். வீட்டிலிருந்து ஆட்டோவில் அழைத்து வரும்போது திருத்தணி காவல் நிலையம் அருகில் மகாலட்சுமிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. உடனடியாக அருகில் இருந்த திருத்தணியில் அரக்கோணம் சாலையில் பிரபல தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகாலட்சுமிக்கு மேல் சிகிச்சை அளிக்க இவரது கணவர் குணசேகர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். 20 நாட்களாக திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் மகாலட்சுமி மேலும் இவருக்கு மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு சான்றிதழ் மருத்துவமனை நிர்வாகம் அப்போது வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை ஏன் வழங்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டு மேலும் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழும் வழங்க வேண்டும் என்று குணசேகர் திருத்தணி அரசு மருத்துவமனையிடம் கேட்டுள்ளார்.

டேக்ஸ் :