முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் நாளை காலை 9 மணி அளவில் டைரக்டர் கங்கை அமரன் மகனும் நடிகருமான பிரேம்ஜி அவர்களுக்கு மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கங்கை அமரனின் மூத்த மகனும் டைரக்டர்மான வெங்கட் பிரபு மற்றும் அவர் இயக்கிய சென்னை 28 திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் திருமணம் நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடுகள் குறித்து பார்வையிட்டனர். முன்னதாக முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர் நாளை காலை நடிகர் பிரேம்ஜி திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருத்தணி முருகன் கோயிலுக்கு திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை தர உள்ளதால் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.