பருவ நிலை மாற்றம் ஏற்ப்பட்டுள்ள நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர். கே. பேட்டை, பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து தினமும் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் திருத்தணி அரசு மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற வருகின்றனர். இருப்பினும் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால், வெளிப்புற நோயாளிகளாக வந்து சுமார் இரண்டு நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டி உள்ளது. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் மருத்துவமனையில் நோயாளிகள் அமர இருக்கைகள் இல்லாததால், மருத்துவர்கள் அறைகளுக்கு வெளியில் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுகின்றனர். காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கிராமங்களில் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தவும், அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவை மேம்ப்படுத்தி கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.