ஜூன் 22ம் தேதி மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இந்த நிகழ்வுக்கு திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் இருந்து வேல் திருக்கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது, இந்த நிகழ்வுக்கு இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், மாநிலச் செயலாளர் ரவீந்திரன், ஆகியோர்கள் சிறப்பாக அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர், மேலும் இந்த நிகழ்வில் மாநாட்டிற்கு எடுத்துச் செல்லும் வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருக்கோயில் மாடவீதியில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினார்கள்
இந்த நிகழ்வின் ஏற்பாடுகளை, மாவட்ட செயலாளர்கள் ஜெ. செல்வா, என 100க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.