மார்கழி மாத கடைசி கிருத்திகை தினத்தை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயிலில் இன்று முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை தினம் மார்கழி மாத கடைசி கிருத்திகை தினம் என்பதால் மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் முருகப்பெருமான் வள்ளி- தெய்வயானை தாயாருடன்- சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். திருக்கோயில் மாட வீதியில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மாட வீதியில் பக்தர்களுக்கு உற்சவர் முருகப்பெருமான் காட்சியளித்தார் பக்தர்கள் அரோகரா!!! அரோகரா!!! என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.