காரனோடை: ராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி

58பார்த்தது
சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் காரனோடையில்
ராணுவ வீரர்களுக்கும்
பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து தேசியக்கொடி பேரணி இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் காரனோடையில்
சென்னை மேற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில்
சோழவரம் மண்டல தலைவர் பாலசந்தர்
ஏற்பாட்டில் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது முப்படை ராணுவ வீரர்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக
பாரத மாதா வாழ்க ராணுவ வீரர்கள் வாழ்க பாரத பிரதமர் மோடி வாழ்க என கோசங்களை எழுப்பியும் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்
பேரணியில் சிறப்பு அழைப்பாளராக
பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன்
கலந்து கொண்டார் மேளதாளங்கள் முழங்க பாரத மாதா வேடமணிந்து சோழவரம் வரை இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று பேரணி நிறைவு பெற்றது
இதில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி