திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 2, 200க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் டியூப் லைட், சோடியம் விளக்கு, மற்றும் குண்டு பல்புகள் போடப்பட்டுள்ளன. இந்த விளக்குகளால் நகராட்சி நிர்வாகத்திற்கு அதிகளவில் மின்சாரம் செலவதுடன் அதிக தொகை மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது.
இந்த செலவை குறைக்கும் வகையில், எல். இ. டி. , விளக்குகள் பொருத்தப்பட தீர்மானித்தது.
இதையடுத்து, மாநில நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் 15 வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ், 3. 38 கோடி ரூபாய் மதிப்பில் எல். இ. டி. , மின்விளக்குகள் நகராட்சி நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளன.
இந்த விளக்குகள் பொருத்தும் பணிகளை நேற்று நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, ஆணையர் அருள் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் அருள் கூறுகையில், ''நகராட்சியில் மின்கட்டணத்தை குறைக்கும் வகையில், , 21 வார்டுகளில், 2, 323 மின்கம்பங்களில் எல். இ. டி. , விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. இப்பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளன. இம்மாதம் இறுதிக்குள் அனைத்து பகுதிகளில் எல். இ. டி. , விளக்குகள் பொருத்தப்படும், '' என்றார்.