மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி?

183பார்த்தது
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி?
திருத்தணி கோட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடம் கற்பிக்கும் ஆசியர்களுக்கு ஒரு நாள் இணை பயிற்சி திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

கீச்சலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசேகர் தலைமை வகித்தார். மாவட்ட பள்ளி கல்வி ஆய்வாளர் சவுத்திரி முன்னிலை வகித்தார். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கலாமணி வரவேற்றார்.


இதில் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம் பங்கேற்று ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆசிரியர்களுக்கு மெல்ல கற்கும் மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்பிப்பது குறித்து விளக்கி கூறினார்.

மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி வகுப்பறையில் சக மாணவர்களுடன் மெல்ல கற்கும் மாணவர்களை பாராட்டுங்கள்.

சிறு சிறு வாக்கியங்கள் சொல்லிக்கொடுத்து புரியும் வகையில் பாடம் நடத்துங்கள்.

ஒவ்வொரு மாணவ-- மாணவியர் ஆங்கிலம், கணிதம் கட்டாயம் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

பயிற்சியில், 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி