வெந்நீர் காயம் குழந்தை பலி.

801பார்த்தது
வெந்நீர் காயம் குழந்தை பலி.
ஆர். கே. பேட்டை அடுத்த அமுதாரெட்டி கண்டிகையைச் சேர்ந்தவர் சுதாகரன், 30. கடந்த மாதம் 18ம் தேதி இவரது மனைவி ராஜம்மாள், தங்களின் மகள் மற்றும் 10 மாத குழந்தை சர்வேஷ் ஆகியோரை குளிக்க வைப்பதற்காக, குளியலறையில் வெந்நீர் வைத்திருந்தார். பின், சோப்பு எடுத்து வர வீட்டிற்கு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வெந்நீர் பாத்திரம் உருண்டு கவிழ்ந்ததில், சர்வேஷ் உடலில் வெந்நீர் பட்டது. உடனடியாக, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கும், பின் மேல் சிகிச்சைக்காக, வேலுார் சி. எம். சி. , மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, சிகிச்சை பலனின்றி சர்வேஷ் உயிரிழந்தார். இது குறித்து ஆர். கே. பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி