திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் சேர்ந்த பாபு என்பவர் கடைகளுக்கு புதிய மின் இணைப்பு பெற கனகம்மாசத்திரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். புதிய மின் இணைப்புக்கு உதவி மின் பொறியாளர் புஷ்பராஜ் ரூ. 6 ஆயிரம் லட்சம் கேட்டதாக கூறப்படுகின்றது. முதல் தவனையாக ரூ. மூன்றாயிரம் ஜிபே மூலம் உதவி பொறியாளருக்கு செலுத்தியதாகவும், மேலும் ரூ. மூன்றாயிரம் கேட்டதால், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை டி. எஸ். பி ராமச்சந்திர மூர்த்தியிடம் புகார் செய்துள்ளார். இதனையேடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய ரூ. மூன்றாயிரம் கனகம்மாசத்திரம் அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி பொறியாளர் புஷ்பராஜிடம் வழங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.