விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணி: அனைத்து கட்சியினருக்கு அழைப்பு

67பார்த்தது
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணி: அனைத்து கட்சியினருக்கு அழைப்பு
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினப் பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் டிச. 28-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தனியார் அமைப்பின் இசை நிகழ்ச்சி சென்னையில் நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது. 

இதில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசாமல், இரு கட்சிகளும் நேரத்தை வீணடித்து வருகின்றன. 

234 தொகுதிகளிலும் தேமுதிக அமைக்கும் கூட்டணி வெற்றிபெறும். உள்ளாட்சித் தேர்தலுக்கும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் தேமுதிக தயாராக உள்ளது. விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சியினரையும் அழைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி