திருத்தணி அருகே முதியவர் வெட்டிக் கொலை

67பார்த்தது
திருத்தணி, அகூர் காலணியை சேர்ந்தவர் ரவி(60), தனியார் செக்யூரிட்டி. இவர், நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று வீட்டு, இரவு வீடு திரும்பினார். இதையடுத்து, இரவு வீட்டிற்குள் புகுந்த 5 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றனர். தகவலறிந்து வந்த திருத்தணி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்ததில், மாடு அறுப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.


சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரில் விசாரணை செய்து கொலை செய்த ஐந்து இளைஞர்களை வரைந்து பிடிக்க திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார் இந்த சம்பவம் இந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி