திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்த நகரம் திருத்தணியைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன சென்னை திருவள்ளூர் அரக்கோணம் திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்றாடம் திருத்தணி சுற்றி உள்ளவர்கள் குறிப்பாக பெண்கள் படிப்பதற்காக பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் வேலைக்குச் செல்லும் பெண்களும் அதிகம் பேர் ரயில்களில் பயணிக்கின்றனர் திருத்தணி கிளைச் சிறை மதுவிலக்கு காவல் நிலையம் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்த பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் தற்போது அந்த இடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக கஞ்சா மற்றும் மது பிரியர்களின் புகலிடமாக மாறி உள்ளதால் அவ்வழியாக நடந்து செல்லும் ரயில் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது இப்பகுதியில் போதையில் திளைக்கும் சமூக விரோத கும்பல் அடிக்கடி சண்டையிடுவதும் அரை நிர்வாணத்தில் வழியாக செல்லும் நபர்களை அச்சுறுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது மேலும் இவர்களுடன் மூன்றாம் பால் இனத்தவர்களின் ஒரு சிலர் அவ்வழியாக வருபவர்களுக்கு தொந்தரவு தருகின்றனர், மாணவிகள் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது