இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி திருத்தணியில் பிறந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு முழு உருவ வெண்கல சிலை அரசு சார்பில் வைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்து ஆய்வு செய்தார் அமைச்சர் நாசர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்த இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர் திருத்தணியில் ரயில் நிலையம் அருகில் தொடக்க கல்வியை பயின்றார், அவர் பிறந்த இந்த மண்ணில் அவருக்கு முழு உருவ சிலை வைக்க 50 ஆண்டுகளுக்கு மேலாக அவரது பிறந்த கிராமத்து மக்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டசபையில் இதற்காக பேசி அனுமதி பெற்ற திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் இதற்கான முன்னெடுப்பு பணிகள் வெண்கல முழு உருவ சிலை வைப்பதற்கான ஆய்வு பணிகளை திருத்தணியில் ரயில் நிலையம் எதிரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தனர் இதேபோல் திருத்தணி நகராட்சி அண்ணா பேருந்து நிலையம் திருத்தணி நகராட்சி அலுவலகம் திருத்தணி நகராட்சி பூங்கா ஆகிய இடங்களிலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரது முழு உருவ சிலை வைப்பதற்கு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
மேலும் அவரது வெண்கல முழு உருவ சிலையை செப்டம்பர் மாதம் அவரது பிறந்த நாள் அன்று வைப்பதற்கான பணியை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.