கணக்கெடுப்பு பணிகளை  மாவட்ட கலெக்டர் ஆய்வு

50பார்த்தது
குடிசைகள் இல்லாத தமிழ்நாடு  என்ற லட்சியத்துடன் தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம்  ஏழை எளியோருக்கு தளம் போட்ட வீடு கட்டித்தரப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 3. 10 லட்சம் மதிப்பீட்டில் நடப்பாண்டில் ஒரு லட்சம்  வீடுகள் கட்டித்தர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   திருவள்ளூர் மாவட்டத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் குடும்பங்கள் தேர்வு செய்ய ஏதுவாக கணக்கெடுக்கும் பணியில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம்  ஊராட்சியில் குடிசை வீடுகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடும்பங்கள் குறித்து நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பணிகளை  மாவட்ட கலெக்டர் டாக்டர் த. பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.   கிராமத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் பயனாளிகளின் குடிசை வீடுகள் பார்வையிட்டு  கணக்கெடுப்பு பணிகள் ஆய்வு செய்தார். குடிசைகள் இல்லாத தமிழ்நாடு என்ற லட்சியத்தை அடையும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், தகுதியான பயனாளிகள்  அனைவருக்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்து தளம் போட்ட வீடு கட்டிக்கொடுக்க அரசு அலுவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா உட்பட இதர தகுதிகள் இல்லை என்று  பயனாளிகள் பட்டியலில் சேர்க்காம விட்டு விடக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி