திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

63பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புதூர் கிராமத்தில்  திரெளபதி அம்மன் கோவிலில்,   தீமிதி திருவிழா கடந்த24 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. 18வது நாளன இன்று நடைபெற்ற தீமிதி திருவிழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகப் பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. 18ம் நாளான  இன்று  பூங்கரகத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக திருக்கோயில் வந்தடைந்தனர். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோயில் சுற்றி கூடியிருக்க அக்னிகுண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொல்லாபுரி அம்மன் எழுந்தருள வாணவேடிக்கையுடன்  200க்கும் மேற்பட்ட  பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கங்களுடன் குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர்.

தொடர்புடைய செய்தி