அம்பத்தூர்: மரம் வெட்டும் போது உயிரிழப்பு.. 3 பேருக்கு சிகிச்சை

78பார்த்தது
அம்பத்தூர்: மரம் வெட்டும் போது உயிரிழப்பு.. 3 பேருக்கு சிகிச்சை
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கெமின் இண்டஸ்ட்ரிஸ் சவுத் ஏசியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் சுற்று சுவர் அருகே பக்கத்து வளாகத்தில் உள்ள அதிகமாக வளர்ந்த மரங்களை தங்கள் நிறுவனத்திற்குள் வந்ததால் வெட்டுவதற்காக ஒப்பந்த பணியாளர்கள் தேவைப்பட்டது இந்நிலையில் முன் அனுபவம் இல்லாத நபர்கள் மரம் ஏறி வெட்டும் பொழுது மரம் திடீரென்று சாய்ந்து சுற்றுச்சுவர் மீது விழுந்து பணி செய்து கொண்டிருந்த நபர்களும் கீழே விழுந்தனர் இதில் தங்கராஜ் , விஜயகுமார் மதியம் 1மணியளவில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அம்பத்தூர் உதவி ஆணையர் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த நபர்களின் 2 பேரின் குடும்பத்தினரும் தங்கள் உறவினருடன் சேர்ந்து நீதி வேண்டுமென தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் கெமின் நிறுவனத்தில் சென்று முறையிட்டனர். காவலர்கள் உள்ளே சென்று காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் முற்றுகையிட்டனர். பிரச்சனையில் ஈடுபட வேண்டாம் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என போலீசார் அறிவுறுத்தியும் அதனை பொருட்படுத்தாமல் உறவினர்கள் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் அரங்கேறியது.

தொடர்புடைய செய்தி