திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்தில் திருப்பதிக்கு செல்ல வேண்டிய பேருந்து காஞ்சிபுரத்திலிருந்து திருத்தணி வந்தபோது நள்ளிரவு அந்தப் பேருந்தில் இருந்த ஓட்டுநர் அன்பு மற்றும் நடத்துனர் அன்பரசு ஆகியோரை 4 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். கடுமையாக தாக்கி விட்டு அந்த நான்கு வாலிபர்கள் நடத்துனரிடம் இருந்து தங்குச் சங்கலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்த நடத்துனர் மற்றும் ஓட்டுநர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.