சர்வம் அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு விருது

358பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கல்வி மாவட்டத்தில், 14 அரசுப் பள்ளிகளில், 1100 மாணவர்களை சர்வம் அறக்கட்டளை நேரில் சந்தித்து கலந்துரையாடல் மூலமாக மொத்தம், 105 மாணவர்கள் தேர்வு செய்தது. பின், மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி, பயிலரங்கங்கள் மூலமாக அவர்கள் லட்சியத்தை அடைய செய்வது, அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்.

மேலும் மாணவர்களின் கல்வி, தனித்திறமை, நற்பண்புகள், ஓழுக்கம், சமூக உணர்வு, போன்றவற்றை மேம்படுத்தி நாட்டின் உயர் பதவிகள் வகிக்கும் படி செய்வதே இந்த அறக்கட்டளையின் நோக்கம் ஆகும். அந்த வகையில், 105 அரசு பள்ளி மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றுகள் வழங்கும் விழா திருத்தணி கமலாதியேட்டர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. சர்வம் அறக்கட்டளை செயலாளர் பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். இதில் விடியல் அறக்கட்டளை நிறுவனர் ராம்குமார் பங்கேற்று மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி