அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருத்தணியில் பேட்டி.

54பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடந்த அ. தி. மு. க. , பிரமுகரின் இல்லத்திருமண விழாவிற்கு அ. தி. மு. க. , முன்னாள் அமைச்சரும், சபா நாயகருமான ஜெயக்குமார் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பா. ஜ. க. , மாதவதாம், இனம் அரசியலை கைவிட வேண்டும். இந்த அரசியலால் தான் வடமாநிலங்களில் மக்கள் பா. ஜ. கவுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு பா. ஜ. க. , தனித்து, 400 இடங்கள் வெற்றி பெறுவோம் என மார்தண்டிக் கொண்டிருந்தனர்.

தற்போது, 240 இடங்களை மட்டுமே பெற்றுள்ளன. இதற்கு காரணம் மாதவாதம், இனம் அரசியல். பிரதமர் மோடிக்கு தற்போது கடிவாளம் போடப்பட்டுள்ளது. அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. இந்தியாவில், 52 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி