திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

50பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி மூன்று டன் வண்ண மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட முருகன் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து அலகு குத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிச் செல்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோவிலில் ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது ஒரு இவ்விழாவுக்காக பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 டன் வண்ண மலர்களைக் கொண்டு மலைக்கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது மேலும் இரண்டாம் நாளான  இன்று ஆடி பரணி  யொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதானை மற்றும்  அலங்காரம் செய்யப்பட்டு  தீபாராதணை நடைபெற்றது.
தமிழகம், ஆந்திரா,   உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்த  லட்சக்கணக்கான பக்தர்கள்  சரவண பொய்கை திருக்குளத்தில் நீராடி,  காவடிகளுக்கு பூஜைகள் செய்து  மலையடிவாரத்திலிருந்து திருப்படிகள் வழியாக காவடிகளுடன்  மலைக் கோயிலி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முருகன் பக்தி  பாடல்கள்  பாடிக்கொண்டும்  உற்சாகத்துடன் நடனமாடி   மலைக்கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து காவடிகள் செலுத்தி முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.
மாட வீதியில் காவடி ஓசைகளும், அரோகர முழக்கங்களுடன் மலைக் கோயில் கோலாகம் பூண்டு காணப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி