திருத்தணியில் பொதுசாலையில் கற்கள் நட்டு கம்பி வலை போட்ட பெண்

79பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கே. ஜி. கண்டிகை ஊராட்சி கே. வி. என். கண்டிகை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைத்து அவ்வழியாக கிராம மக்கள் சென்று வரும் நிலையில் அதே கிராமத்தைச் தனிநபர் ஒருவர் கிராம சாலை தனக்கு சொந்தமானதாக கூறி சாலையின் இரு புறமும் கல்தூண் அமைத்து கம்பி வேலி அமைத்து சாலை அடைக்கப்பட்டதால் அக்கிராம மக்கள் அவ்வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்று வர  வசதியின்றி தவித்து வருகின்றனர். எனவே வருவாய் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு சாலை அடைப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதேபோல் அடைக்கப்பட்டுள்ள கற்களை அகற்றி அவ்வழியாக பொதுமக்கள் சென்று வர வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி