இருசக்கர வாகன திருட்டு ஈடுபட்ட 5 பேர் கைது

1041பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக பதியப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய திருவள்ளூர் மாவட்ட எஸ். பி சீனிவாச பெருமாள் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைலையில், ஆர். கே. பேட்டை இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாசாணை மேற்கொண்டனர்.

இதில் இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த சூர்யா (23), சிவா(19), ஆகாஷ் (22), ஆறுமுகம் (24) அன்பரசு (23) ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து பதிவு எண் நீக்கப்பட்ட 18 இருசக்கர பறிமுதல் செய்து ஐந்து வரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

தொடர்புடைய செய்தி