திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சித்தூர் சாலை, பை-பாஸ் சாலை இணைக்கும் பகுதியில், புதிய ரவுண்டானா பகுதி மாநில நெடுஞ்சாலையால் இந்த பகுதியில் அமைக்கப்பட உள்ளது போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணியினை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
இதில் ஒரு பகுதியாக மாநில நெடுஞ்சாலையில் 30 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டி அகற்றினர் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளதால் மரங்களை வெட்டி விரைவாக சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மின் கம்பங்கள் சாலை விரிவாக்க பணிகளில் சாலை நடுவில் பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது சாலை ஓரங்களில் அகற்றாமல் சாலை நடுவில் உள்ள மின் கம்பங்களை விரைவாக அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோரிக்கை வைத்தும்
மின்சார கம்பங்கள் சாலை ஓரம் அகற்றாமல் திருத்தணி செயற்பொறியாளர் மின்சார துறை அதிகாரி மெத்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
மொத்தத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் மின்சாரத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைப்பு செய்து சாலையோரம் மின் கம்பங்களை அகற்ற வேண்டும்
மின்சார துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது விரைவாக தமிழக அரசு எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.