விற்பனையகத்திற்கு சீல்: போராட்டத்தில் இறங்கிய பெண்கள்

79பார்த்தது
விதவைப் பெண்கள் உள்ளிட்ட 12 மகளிர்கள் இணைந்து நடத்தி வந்த பூ மாலை விற்பனையகத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் போராட்டத்தில் இறங்கிய மகளிர் சுய உதவி குழுவினரால் திருவள்ளூரில் பரபரப்பு.

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே பூ மாலை வளாகத்தில் ஸ்ரீதேவி என்பவரின் மகளிர் சுய உதவி குழுவினர் விதவைப் பெண்கள் உள்ளிட்ட 12 பேர் நடத்தி வந்த பூக்கள் மலர் வளையம் பூ விற்பனையகம் செய்து வந்த கடையை நாம் மூன்று மாதம் ஒப்பந்தம் இன்னும் இருக்கும் நிலையில் அதிரடியாக நகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் கடையில் இருந்த பணம் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அகற்றி திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரனின் ஆதரவாளர் திவாகரன் என்பவருக்கு வழங்கும் விதமாக மகளிர் திட்ட அலுவலர் செல்வராணி செயல்படுவதாக மகளிர் சுய உதவி குழுவினர் பரபரப்பு குற்றச்சாட்டு தமிழக அரசு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மகளிர் குழுவினர் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ள நிலையில் அதிரடியாக சீல் வைத்த நகராட்சி மற்றும் மகளிர் திட்ட அலுவலர்களுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர் முதலமைச்சர் வருகிற 18-ஆம் தேதி பொன்னேரி தொகுதியில் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில் கருப்பு கொடி காட்டுவோம் என்றும் பெண் மகளிர் சுய உதவி குழுவினர் தெரிவித்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி