திருவள்ளூரில் மணல் திருட்டு இருவர் கைது

76பார்த்தது
திருவள்ளூரில் மணல் திருட்டு இருவர் கைது
மப்பேடு அடுத்த இறையாமங்கலம் சந்திப்பு பகுதியில் மப்பேடு காவல் உதவி ஆய்வாளர் பார்த்தீபன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தததில் இரண்டரை யூனிட் மணல் திருடி வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிந்த மப்பேடு போலீசார் லாரியை பறிமுதல் செய்து குன்றத்துார் பகுதியைச் சேர்ந்த டிரவைர் சிலம்பரசன், 35 மற்றும் கிளீனர் குன்றத்துார் பாபு, 65 ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி