செவ்வாப்பேட்டை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 42. வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கடையில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் பணிக்கு வந்த வெங்கடேசன், கடையின் அருகே தன் 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பணிபுரிந்துள்ளார்.
பின், அன்று மாலை 6: 30 மணியளவில், தன் இருசக்கர வாகனத்தை பார்த்த போது மாயமானது தெரிய வந்தது.
இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இதை தொடர்ந்து, கடையில் இருந்த 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, செவ்வாப்பேட்டை போலீசார், கிளாம்பாக்கம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த
பிரபு, 39, என்ற வாலிபரை கைது செய்து, இருசக்கர வாகனத்தை மீட்டனர்.
அதன்பின், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச் சிறையில் அடைத்தனர்.