அரசு வீடு வழங்க வேண்டும்: தமிழ் அறிஞர் மகள் கலெக்டரிடம் மனு

52பார்த்தது
மறைமலை அடிகளாரின் மூன்றாவது மனைவி மறை கண்ணம்மாளுக்கு பிறந்தவர் திரிபுர சொக்கம்மாள் 75 வயது

திரிபுரா சொக்கமளக்கும் -சந்திரசேகருக்கு
திருமணம் ஆகி விஜயலட்சுமி என்ற மகள் இருந்து வருகிறார்,

விஜயலட்சுமிக்கும் -சுப்பிரமணிக்கும் திருமணம் நடைபெற்று பூந்தமல்லி கரையான்சாவடியில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகின்றனர்,

இந்நிலையில் திரிபுர சொக்கம்மாள் கணவர் சந்திரசேகர் உயிரிழந்த நிலையில் தனது முதியோர் உதவித்தொகை நிதியான 1200 ரூபாய் மாதம் வைத்து சைதாப்பேட்டையில் தங்கி இருந்த வீட்டிற்கு வாடகை கட்ட முடியாமல் தவித்து வந்த அவர்,

கடந்த இரண்டு ஆண்டுகளாக மகள் தங்கி வரும் வாடகை வீடான பூந்தமல்லி கரையான்சாவடியில் மகளுடன் தங்கி வசித்து வருகிறார்,

மகள் விஜயலட்சுமி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாயில் வைத்தும் தனது கணவன் சுப்பிரமணி பெயிண்டர் வேலை செய்து வரும் சொற்ப வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார்கள்

இதனால் மகளும் வாடகை கட்ட முடியாமலும்
பொருளாதார வசதி இல்லாமல் வசித்து வருவதால்,

தான் வாடகை கட்ட முடியாமல் மகள் வீட்டில் வசித்து வருவதாகவும், வருமானம் இல்லாததால் வாடகை கொடுக்க முடியாமலும் மகளும் சிரமப்படுவதாகவும், அரசு தங்களுக்கு வீடு வழங்கி பொருளாதார உதவி செய்திட வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி