ஆன்லைன் இரு சக்கர வாகனம் ஓட்டும் வேலை செய்தபடி கஞ்சா விற்பனை

1068பார்த்தது
ஆன்லைன் இரு சக்கர வாகனம் ஓட்டும் வேலை செய்தபடி கஞ்சா விற்பனை
திருவேற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக வந்த தகவலையடுத்து திருவேற்காடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்ட போது ஆன்லைனில் இரு சக்கர வாகனம் ஓட்டும் வேலை செய்து வந்த சங்கர் என்ற பெரிய சேட்டு(26), என்பவரை மடக்கி சோதனை செய்தபோது அவரிடம் அதிக அளவில் கஞ்சா இப்பது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் திருவேற்காட்டை சேர்ந்த அவரது நண்பர் கோகுல் நாத் 22 என்பவரை கைது செய்து விசாரித்த போது இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக ஆன்லைனில் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது போல் பகுதி நேரமாக ஒட்டி விட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு செல்போன்கள் ஒரு கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

ஆன்லைனில் இரு சக்கர வாகனம் ஓட்டுவது போல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி