மெட்ரோ வாட்டர் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி

64பார்த்தது
பூந்தமல்லி போரூர் சாலையில் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து சாலை குண்டு குளியுமாக தாறுமாறாக காட்சியளித்து வருகிறது இந்த சாலையில் பயணிக்க கூடிய வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் மேலும் பைக்கில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் காட்சி நம்மால் காணப்படுகிறது தற்போது கூட பைக்கில் வந்த இருவர் சாலையில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது, இந்த சாலை அடியில் செல்லக்கூடிய குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக ஓடிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் இந்த தண்ணீரால் குண்டு குழியுமாக காட்சியளித்து வருகிறது, தற்போது வரை நடவடிக்கை எடுக்காத நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது ஆட்டோ, கார் , பைக், பேருந்துகள், ஆம்புலன்ஸ்கள் இந்த சாலையை கடந்து செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு பக்கம் மெட்ரோ பணி மற்றொரு பக்கம் மெட்ரோ வாட்டர் உடைப்பு என இந்த சாலை இருந்து வருகிறது உடைப்பை சரி செய்யாமல் எவ்வளவுதான் தண்ணீர் எடுத்தாலும் மீண்டும் மீண்டும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிற ஒரு பரிதாப நிலையை நம்மால் காண முடிகிறது. குழாய் உடைப்பை சரி செய்து விட்டு அதன் பின்பு தண்ணீர் எடுத்தால் சரியாக இருக்கும் என பொதுமக்கள் புகார் உடன் சேர்த்து கோரிக்கை வைக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி