திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தை இன்று மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அவ்வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். உடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி. அருண் ராய், சிட்கோ மேலாண்மை இயக்குநர் எஸ். மதுமதி, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ். பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி, தொழில் வணிக கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம், கண்காணிப்பு பொறியாளர் திரு. எம். ஆர். சோமசுந்தரம், சிட்கோ பொறியாளர்கள், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அ. சேகர், தொழிற்பேட்டை கிளை மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.