திருவள்ளூரில் கல்லூரி மாணவி மாயம்

58பார்த்தது
திருவள்ளூரில் கல்லூரி மாணவி மாயம்
திருவள்ளூர் நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சின்னகுட்டி அர்ச்சனா, 21.

திருநின்றவூர் ஜெயா கல்லுாரியில் எம். பி. ஏ. , முதலாமாண்டு படித்து வரும் இவர் 5ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை சின்னகுட்டி அளித்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி