திருவள்ளூர்: பள்ளியை விட்டே சென்று விடுங்கள்.. மாணவர்கள் பரபரப்பு புகார்

58பார்த்தது
திருவள்ளூர்: பள்ளியை விட்டே சென்று விடுங்கள்.. மாணவர்கள் பரபரப்பு புகார்
திருவள்ளூர் அருகே பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களை ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து விட்டீர்கள் 10ஆம் வகுப்பை விட்டு செல்லுங்கள் அல்லது பள்ளியை விட்டே சென்று விடுங்கள் என்று கூறிய அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது ஆட்சியரிடம் பெற்றோருடன் வந்து 3 மாணவர்கள் புகார் செய்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த மூன்று பள்ளி மாணவர்களை பட்டியலின மாணவர்கள் ஏன் படிக்க வேண்டும் என்று கூறி ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்று அறிவித்து மாணவர்கள் மூன்று பேரிடம் அவர்களின் பெற்றோர்களை வரவைத்து கட்டாயமாக கையொப்பம் பெற்று பள்ளியை விட்டு மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு ஐடிஐயில் வேலைக்குச் சேருங்கள் என்று கூறிய தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகிய 2 பேர் மீது மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் தரப்பில் பெற்றோர்களுடன் வந்து ஆட்சியர் பிரதாப்பிடம் புகார் மனு அளித்தனர். 

நாளை(இன்று) பள்ளிக்கு வந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக திருவள்ளூர் ஆட்சியர் மு. பிரதாப் பெற்றோர்களுக்கு உறுதியளித்தார். இந்த நிலையில் இன்று பள்ளிக்கல்வி துறை உயரதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி