பூந்தமல்லி அடுத்த திருமழிசை சுந்தரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 121 மாணவர்களுக்கும், குத்தம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 63 மாணவர்களுக்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பெ. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ. கிருஷ்ணசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.
இதனைத் தொடர்ந்து, திருமழிசை சுந்தரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பில் முதலிடம் பிடித்த 2 மாணவர்களுக்கு பேரூராட்சி தலைவர் ஜெ. மகாதேவன் சார்பில், தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினார். பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் புனித வள்ளி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக துரை. சந்திரசேகர் எம்எல்ஏ கலந்துகொண்டு 11ம் வகுப்பு கல்வி பயிலும் 322 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினர்.