அம்மையார்குப்பம் கிராமத்தின் மேற்கு பகுதியில் ஆந்திரா பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம், மட்டவலம் வழியாக பாலசமுத்திரம் பகுதிக்கு தார் சாலை வசதி உள்ளது.
ஆனால், இந்த மார்க்கத்தில் சோதனைச்சாவடி ஏதும் இல்லை. காட்டூர் பகுதியில் மட்டுமே மதுவிலக்கு அமலாக்க பிரிவு சோதனைச்சாவடி உள்ளது. இந்நிலையில், அம்மையார்குப்பம் ஆந்திரா பேருந்து நிலையம் பகுதியில் தொடர்ச்சியாக கஞ்சா கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஜனகராஜகுப்பம் காலனியைச் சேர்ந்த கேப்டன், 26, ஜனகராஜகுப்பத்தைச் சேர்ந்த சத்யா, 24, ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து, 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.