திருவள்ளுர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று, காலை 10: 00 மணியளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலை, வருவாய், மின் வாரியம், கூட்டுறவு, பொதுப்பணி, வேளாண் பொறியியல், மீன் வளம், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வணிகம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும்.
வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும், வரும் 26ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் சமூக இடைவெளி பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் பங்கேற்று, பயன் பெறுமாறு, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்