கார் ஓட்டுனரிடம் ரூ. 15, 000 பறிப்பு.

2769பார்த்தது
கார் ஓட்டுனரிடம் ரூ. 15, 000 பறிப்பு.
பூந்தமல்லி, கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் அன்பரசு, 26; கார் ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, மாங்காடு, மீனாட்சி நகரில் உள்ள தனியார் வங்கி ஏ. டி. எம். , மையத்தில் பணம் 'டெபாசிட்' செய்ய வந்தார்.

அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூவர், ஏ. டி. எம். , மையம் உள்ளே இருந்த கந்தசாமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 5, 000 ரூபாயை பறித்தனர்.

மேலும், ஏ. டி. எம். , கார்டில் இருந்து, மேலும் 10, 000 ரூபாயை எடுக்க சொல்லி மிரட்டி, அதையும் பறித்து தப்பினர். இதுகுறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி