திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சுகாதார அலுவலக வயலில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் மணி தலைமையில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் முக்கிய கோரிக்கையாக அரசு வேலைவாய்ப்பாக பனி மூப்பு அடிப்படையில் இன சுழற்சி முறை பின்பற்றப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட காலம் முறை ஊதிய பணியிடங்களில் அரசு விதிகளின்படி தினக்கூலி அடிப்படையில் முறையாக பணி நியமனம் செய்யப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரும் கோரிக்கையின் படி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது