மாங்காட்டில் சாலையில் கிடந்த சிம் கார்டு இல்லாத செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த வக்கீல்
மாங்காட்டை சேர்ந்தவர் கலைவாணன் வக்கீலான இவர் இன்று தனது நண்பர் பிரசாந்த் என்பவருடன் நடந்து சென்ற போது சாலையில் செல்போன் இருப்பதை கண்டறிந்தார். அந்த செல்போனில் சிம் கார்டு இல்லாததையடுத்து அந்த செல்போனை மாங்காடு குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாளிடம் கொண்டு சென்று ஒப்படைத்தார். அந்த செல்போனின் மதிப்பு ரூ. 25 ஆயிரம் எனவும் செல்போனில் சிம் கார்டு இல்லாததால் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிம்கார்டை எடுத்துவிட்டு செல்போனை வீசி விட்டு சென்றார்களா அல்லது யாரேனும் செல்போனை தவற விட்டு சென்றார்களா என்ற கோணத்தில் மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர் சாலையில் கிடந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த வக்கீல்களை இன்ஸ்பெக்டர் பாராட்டினார்