திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, திருமழிசை பேரூராட்சி. நெடுஞ்சாலையோரம் 'பேனர்' வைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போது விளம்பர பதாகை வைப்பது அதிகரித்து வருகிறது. இவ்வாறு நெடுஞ்சாலையோரம் விளம்பர பதாகை வைப்பதில்,
அரசியல் கட்சியினர் புது வழியை பின்பற்றி வருகின்றனர். தற்போது, பயணியர் நிழற்குடை,
அரசியல் கட்சியினர் விளம்பர பதாகை வைக்கும் இடமாக மாறி வருகிறது. இவ்வாறு நிழற்குடையில்
அரசியல் கட்சி விளம்பர பதாகை வைப்பதை சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், அ. தி. மு. க. வினர் பயணியர் நிழற்குடையில் விளம்பர பதாகை வைத்திருந்த நிலையில், தற்போது தி. மு. க. வினர் வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலையோரம் உள்ள நிழற்குடையை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.